கவிஞர் கங்கைமணிமாறன்

My blogs

About me

Gender Male
Industry Government
Occupation தமிழ் ஆசிரியர் ஓய்வு
Location கங்காதரபுரம், குத்தாலம் தமிழ்நாடு, India
Introduction நான் கவிஞன். "எழுதும் உணர்ச்சிகள் இருந்தால் மட்டும் எழுவது கவிதை ஆகாது! எழுத்தின் உணர்சிகள் எவைஎனத் தெரிந்தே எழுதும் கவிதை சாகாது!"என்று கவிதை இலக்கணத்தைக் கவிதையில் சொல்பவன். ஆன்மிக- இலக்கியச் சொற்பொழிவாளன். திருவருட்பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை என்னும் சேவை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலன். 2011 ல் துவங்கப்பட்ட அந்த அமைப்பின் மூலம் ஒரு பெருவிழா எடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி மகத்தான பரிசுகள் வழங்கி வள்ளல் பெருமானை இளைய சமூகத்திடம் கொண்டு செல்லவேண்டும் என்னும் வேட்கையோடும் தொலை நோக்குப் பார்வையோடும் செயல் பட்டு வருபவன். தமிழகம் எங்கும் பல மேடைகளில் வள்ளலாரை அன்பர்கள் உள்ளம் கொள்ளும் வண்ணம்பேசி - புதிய எழுச்சியை ஏற்படுத்தி வருபவன்! கடல் கடந்தும் ..(குவைத் )சென்று இலக்கியம் பேசி வருபவன். வள்ளலார் பேசியவர் மட்டும் இல்லை என்பதால் அவர் பெயரில் ஓர் அறக் கட்டளை நிறுவி மரம் வளர்த்தல் -மனித நேயம் வளர்த்தல்- அறம் வளர்த்தல் -ஆன்ம நேயம் வளர்த்தல் அன்னம் அளித்தல்-ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் செய்தல்- அறிவியல் சிந்தனைகளை ஊட்டல்-என தொடர் பணிகள் ஆற்றி வருகிறேன். இன்றும் தொடர்கிறது பணி.
Interests இலக்கியம் -ஆன்மிகம் -பொதுத் தொண்டு- கவிதை எழுதுதல் - இலக்கிய ஆன்மிக தன்னம்பிக்கை சொற்பொழிவுகள் - நடுவராய்ப்ப் பட்டி மண்டபம்.