பா.செயப்பிரகாசம் [சூரியதீபன்]

My blogs

About me

Location Chennai, India
Introduction காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.