அகில்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Location Toronto, Ontario, Canada
Introduction நான் ஒரு இலங்கைத் தமிழன். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறேன். கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் மற்றும் வாசிப்பதில் மிகுந்த விருப்பம் உடையவன். சக மனிதர்கள், அவர்கள் சார்ந்த நடப்பியல்களை எனது எழுத்தில் கொண்டுவர முயல்கிறேன். அகில், கதைப்பிரியன் என்ற பெயர்களில் எழுதிவருகிறேன். திசை மாறிய தென்றல், கண்ணின் மணி நீயெனக்கு என்ற இரண்டு நாவல்கள் மற்றும் நமது விரதங்களும் பலன்களும், இந்துமதம் மறைபொருள் தத்துவ விளக்கம் என்ற இரண்டு ஆன்மீக நூல்கள் வெளியிட்டுள்ளேன். வாழ்க்கையில் ஏதாவது ஓன்றை சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ் ஆதர்ஸ்.கொம் (www.tamilauthors.com) என்ற இணையத்தளத்தை நடத்திவருகிறேன். உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் படைப்பாளிகள் பற்றிய விபரங்களை சேகரித்து அனைவரும் பயன்பெற வைப்பதே அவ்விணையத்தளத்தின் நோக்கம். எழுத்தாளர்களுடைய படைப்புக்கள் மட்டுமன்றி சமகால இலக்கிய நிகழ்வுகள், குறுந்திரைப்படங்கள், நேர்காணல்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்களைத் தாங்கி உலாவருகிறது தமிழ்ஆதர்ஸ்.கொம். ஈழத்து சிறுகதைகள் என்ற இவ்வலைத்தளத்தின் ஊடாக நான் படித்துச் சுவைத்த ஈழத்து எழுத்தாளர்களின் சில கதைகளை கதைப் பிரியர்களாகிய உங்களுக்கு விருந்தாக்குகிறேன்.