selventhiran

My blogs

About me

Introduction எழுத்தாளர் செல்வேந்திரன் 5 ஆண்டுகள் விகடன் குழுமத்திலும், 12 ஆண்டுகள் தி ஹிண்டு நாளிதழிலும் பணியாற்றினார். 2007 முதல் வலைப்பூவில் எழுதி வருகிறார். தமிழின் முன்னணி ஊடகங்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார். ஆனந்தவிகடனில் எழுதிய ‘முடியலத்துவம்’ நகைச்சுவைக் கவிதைத் தொடர் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது. இவர் எழுதிய வாசிப்பது எப்படி நூல் திரு. கமல்ஹாசன் அவர்களால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பரிந்துரைக்கப்பட்டு விற்பனையில் சாதனை படைத்தது. பாலைநிலப் பயணம் எனும் பயண நூலும் கவனம் பெற்றது. பிக்பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எழுத்தாளராகப் பங்காற்றியுள்ளார். சினிமாக்கள், வெப் சீரிஸ்களுக்குத் திரைக்கதைகள் எழுதுகிறார். எழுத்தாளர் வண்ணதாசனைப் பற்றி ‘நதியின் பாடல்’ எனும் ஆவணப் படத்தை இயக்கியுள்ளார். எழுதியுள்ள நூல்கள்: 1. முடியலத்துவம் 2. பாலை நிலப் பயணம் 3. வாசிப்பது எப்படி? 4. நகுமோ லேய் பயலே 5. உறைப்புளி 6. How to Read?
Interests இலக்கியம் | வரலாறு | இசை | சினிமா | பயணம் | காந்தியம் | தொழில்முனைவு | உணவு