DeviJaga

My blogs

About me

Introduction 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் பிறந்த இந்நூலாசிரியரின் சொந்த ஊர் கரூர். பெற்றோர் சூட்டிய பெயர் லக்ஷ்மி தேவி. திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தவர். மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் தங்க விருது பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளாக ஏராளமான கவிதைகள், பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியிருக்கும் இவரின் நான்காம் நூல் இது. தாய்மொழி தமிழுடன் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் புலமை பெற்றுள்ள இவர் ஸ்பெயின், அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர்,பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டவர். கணவர் டி.ஆர். ஜெகதீசன் 37 ஆண்டுகளாக கல்விப் பணீயில் தன்னை அர்பணித்துக் கொண்டவர். கிண்டி பொறியியற் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர். மகன் இராமநாதன் மருமகள் சங்கீதா அமெரிக்காவிலும், மகள்கள் வனிதா-இராஜகோபாலன், லலிதா-பூபாலன் இந்தியாவிலும் வசிக்கின்றனர். குடும்பத் தலைவியான தேவி ஜகா ‘மணீமண்டபம்’ என்ற சிறுகதை நூலையும், ‘கலிபோர்னியாவில் கல்யாணம்’ என்ற பயணக் கட்டுரை நூலையும், ‘முத்துகூடம்” என்ற சிறுவர்களுக்கான நூலையும் எழுதியவர். இக்கவிதை நூல் இவரது நான்காவது நூல் மட்டுமன்று நல்ல நூலும் கூட !