Manikanda Prabhu

My blogs

About me

Location Thirunelveli, Tamilnadu, India
Introduction என்ன பத்தி சொல்ற பெருசா சொல்ற மாதிரி நான் ஒன்னும் சாதிக்கலேனு பொய் சொல்ல மாட்டேன் , எல்லாரும் அவங்களுக்குள்ள சொல்லிக்கிற மாதிரி நானும் சாதிக்க பிறந்தவன் தான். அத வெளிப்படையா சொல்றது தான் என்னோட பலம். ஆனா இது வரை நான் சாதிச்சது ஒரு சின்ன வட்டத்துக்குள்ள மட்டும் தான். என் அப்பா , அம்மா சந்தோஷ படுற மாறி ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் , சொந்த வீடு , ஒரு காரு , இவ்ளோ தான் என்னோட சாதனை. இத பண்றதுல எனக்கு பெரிய அளவுல விருப்பம் சின்ன வயசுல இருந்தே இருந்தது இல்ல, அதனால தானோ என்னோவோ எல்லாரும் தேர்வுல நெறைய மதிப்பெண் வாங்கி பெரிய வேலைக்கு போனும் நு நல்லா படிப்பாங்க ஆனா எனக்கு மட்டும் அதுல ஒரு பிடிப்பு இல்ல, அத நான் பண்ணவும் இல்ல. அதனாலயே பலரோட வெறுப்புக்கு ஆளானேன், நெறைய அடிபட்டேன், ஒரு மனுசனா எனக்குள்ள மரியாதை மறுக்கப்பட்ட போது தான் நான் செய்ய வேண்டிய , அல்லது என்கிட்ட இருந்து இந்த சமுதாயம் என்ன எதிர்பார்க்குது நு தெரிஞ்சிகிட்டேன். அத செஞ்சி முடிக்க எனக்கு ரொம்ப காலம் கூட தேவை படல , 2 வருஷம் தான். ஆனா மறுபடியும் ஏதோ ஒரு வெறுமை, இவ்ளோ தானா , இதுக்கு தானா ஒரு பிறவி ? கேள்விகள் கேக்குறது ரொம்ப சுலபம் அதுவும் நமக்குள்ளயே கேட்டுக்கிறது அத விட சுலபம் , ஆனா விடை தேடி என் பயணம் மட்டும் போய்கிட்டே இருக்கு .....