Gurusamy

My blogs

About me

Gender Male
Occupation Professor
Location madurai, Tamilnadu, India
Introduction விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரம் எனது சொந்த கிராமம். எனது பெற்றோர் கு.ஞானப்பிரகாசம், ம.அருளாயி. எனது தொடக்கக் கல்வியை தைலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும் இடைநிலைக்கல்வியை தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியை சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பெற்றேன். மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் இளம் இலக்கியமும் (பி.லிட்), மதுரை, மதுரைக் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியமும் கற்றேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முனைவர் பட்டம். 18.06.2012 முதல் மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். ஆய்வுகளில் கவனம் செலுத்துவதில் பெரு விருப்பம். இருபது ஆண்டுகளாக மாற்றுச் சிந்தனையைச் சார்ந்து இலக்கியம், இலக்கணம், சமுதாயம் குறித்து பேசியும் எழுதியும் வருகிறேன். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளேன். தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்...), 'அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் - நிலம் - சாதி - சாஸ்திரம்', தமிழ் இலக்கணப் புறனடைகள் முதலிய நூல்கள் எழுதியுள்ளேன்.