ஜெயா
My blogs
| Gender | Female |
|---|---|
| Industry | Education |
| Occupation | Teacher |
| Location | Seremban, Negeri Sembilan, Malaysia |
| Introduction | என்னை நன்கு இறைவன் செய்தனன். தம்மை நன்கு தமிழ் செய்யுமாறு. என்னை ஈன்றவள் அன்னை, வளர்த்தவள் தமிழன்னை. 1976இல் என் அன்னை எனக்குத் தமிழ் புகட்ட அதுவே வாழ்க்கையும் ஆனது. அன்று எனக்கு அகவை 4. 18ஆம் அகவையில் தற்கால ஆசிரியராக ஒரு தமிழ்ப்பள்ளியில் இணைந்தேன். பிறகு 1 வருடத்துக்குள் ஆசிரியர்ப்பயிற்சி கல்லூரியில் தமிழ்மொழி ஆசிரியர் பயிற்சிக்குக் கடிதம் கிடைக்க ஆசிரியர் எனும் முத்திரையோடு என் பயணம் தொடர ஆரம்பித்தது. அன்று எனக்குத் தமிழைப் பற்றிய ஆர்வமும், அறிவும் குறைவே. 2004இல் ஓராண்டு பயிற்சியில் தமிழ்மொழி பாடத்தை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கையில் என் அன்னைத் தமிழை நேசிக்க ஆரம்பித்தேன்.பட்டப் படிப்பையும் தமிழ் முதன்மை பெற வேண்டும் என்று காத்திருக்க அந்த வாய்ப்பையும் அன்னை எனக்கு வழங்கியதும் என் மகிழ்ச்சியை என்னவென்று கூற. இணையம் என்னுள் தமிழ் தாகத்தை வளர்த்தது எனலாம்.பல வருடங்கள் கடந்து விட்டன, பல மாணவர்களை உருவாக்கி விட்டேன். அணு அளவே தமிழைக் கற்றவள். கற்றலும் தொடரும், கற்பித்தலும் தொடரும் என் மூச்சு உள்ளவரை. |
| Interests | இணையத்தில் தேவைப்படும் தகவல்களைத் தேடிப் படிப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. |
| Favorite movies | நல்ல கதையம்சம் கொண்ட அனைத்துப் படங்களும் பிடிக்கும். மொழியோ, நடிகரோ ஒரு பிரச்சனையல்ல. |
| Favorite music | மனம் அமைதியாக வேண்டும் இசையைக் கேட்டால். அப்படிப் பட்ட எல்லா இசையையும் விரும்புகின்றேன். |
| Favorite books | சுகி சிவம், இறையன்பு இவர்களின் ஆன்மீக, தன்முனைப்பு நூல்கள். தமிழ் புதினங்கள். எழுத்தாளர் அகிலன்,சுஜாதா பிடித்தமானவர்கள். அகிலனின் நெஞ்சின் அலைகள் இன்னும் மனதைவிட்டு அகலவில்லை. |

