மதுரை அமர்நாத்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Occupation மதுரை மாநகராட்சியில் ஆணையாளரின் தனி எழுத்தராக இருந்து தன்விருப்ப ஓய்வு பெற்றேன்
Location மதுரை மாநகரம் - தமிழ்நாடு - இந்தியா - 625007, தமிழ்நாடு, India
Introduction நான் மதுரை மாநகரில் சளராஷ்டிர இனத்தில் பிறந்து - மதுரையிலேயே சௌராஷ்டிர உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றேன். பின்னர் தியாகராசர் கலைக் கல்லூரியில் இளநிலைக் கல்வி கற்றேன். அப்போது தணியாத தமிழ் தாகத்தை ஊட்டினர் அங்கிருந்த பேராசிரியப் பெருமக்கள். தமிழண்ணல், சங்கரநாராயணன், சுந்தரம், மகாதேவன் போன்ற ஆன்றோர்கள் தமிழ்ப் பாடங்களைக் கற்றுக் கொடுத்து தமிழ் மொழியில் ஆர்வத்தை ஊட்டினார்கள். பேராசிரியர் சுப.அண்ணாமலை அவர்கள் என்னைத் இளங்கலை வகுப்பில் தமிழ் இலக்கியத்தைப் படிக்க அறிவுறுத்தியும் - மறுத்து ஆங்கில இலக்கியத்தைப் படித்தேன். ஆனால் உள்ளுக்குள் கல்லூரியில் ஏற்றிய தமிழ் பற்று சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எனவே நேரம் கிடைத்த போதெல்லாம் நல்ல தமிழ் நூல்களைப் படித்தேன். தன்விருப்ப ஓய்வு கிடைத்த பிறகு நான் படித்துப் புரிந்து கொண்டதைப் பிறர் அறிந்து கொள்ளும் வண்ணம் எனக்குத் தெரிந்த தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். பிழையிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.
Interests ஓய்வு ஊதியம் கிடைக்கும் வரை பணியாற்றினேன். பின்னர் ஓய்வூதியத்தை வைத்து தமிழ் நூல்களை வாங்கி நல்ல நல்ல கருத்துகளைத் தெரிந்து கொண்டேன். இறைவன் இருக்கும் தலங்களைத் தேடிச் சென்று தொழுகிறேன். நான் பெற்ற அனுபவத்தை இதிலே பகிர்ந்து கொள்கிறேன்.
Favorite Movies சிறு வயது முதலே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த திரைப்படங்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். நாம் நினைக்கின்ற எண்ணங்களை நாம் செயல்படுத்த முடிவதில்லை. அவர் திரைப்படத்தில் செய்து காட்டுவார். சிவாஜி கணேசன் நடித்த படங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாசமலர், பந்தபாசம், இரத்தத் திலகம், வியட்னாம் வீடு போன்ற படங்கள் மிகவும் பிடிக்கும். ஜெமினி கணேசன் அவர்கள் நடித்த படங்களில் எனக்குப் பிடித்த படம் புன்னகை, சுமைதாங்கி. பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய பல படங்களை நான் இரசித்திருக்கிறேன். ரஜினி நடித்த படங்களில் எனக்குப் படித்த படம் ஆறு முதல் அறுபது வரை மற்றும் புவனா ஒரு கேள்விக்குறி.
Favorite Music டி.எம்.எஸ். அவர்களின் திரைப்பட இசை, சீரிகாழியாரின் பக்திப் பாடல்கள், கண்ணதாசன் அவர்களின் தத்துவப் பாடல்கள் அத்தனையும், பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்.
Favorite Books முதலில் படிக்கத் துவங்கியது கண்ணதாசன் பாடல்கள். பிறகு பாரதிதாசன் பாடல்கள். பிறகு பாரதியார் பாடல்கள். இப்படியாகக் கவிதையில் சுகம் கண்டு பின்னர் பன்னிருதிருமுறை, நாலாயிர திவ்விய பிரபந்தம், சித்தர் பாடல்கள், திருக்குறள், நாலடியார், அறநெறிச்சாரம் போன்றவற்றைப் படித்தேன்.