MUTHUPET BBC

My blogs

About me

Introduction அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அன்பார்ந்த முத்துப்பேட்டை வலை வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். பணிநிமித்தம் கடல்கடந்து வெளிநாடுகளிலும், முத்துப்பேட்டையைப் பிரிந்து வாழும் முத்துப்பேட்டை பொதுமக்களுக்கு முத்துப்பேட்டையில் நிகழும் பல்வேறு தகவல்களைத் தொகுத்து வழங்க வேண்டி இந்த வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். பல்வேறு தளங்களில் செய்தி பங்களிப்பாளர்களாக பங்காற்றிய அனுபவத்துடனும், பல்வேறு நாடுகளில் வசிக்கும் நண்பர்கள், அபிமானிகள், உள்ளூர் பிரமுகர்கள், உள்ளூர் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பேரில் இந்த வலைப்பதிவை துவங்கியுள்ளோம். அதனைத்தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் வலைப்பதிவு செய்தியாளர்களின் அனுபவ உதவியுடன் முத்துப்பேட்டை பிபிசி வலைப்பதிவு சேவையை துவங்கியுள்ளோம். முத்துப்பேட்டை பிபிசி தனித்தன்மையுடன் முத்துப்பேட்டையின் பிரதான ஊடகமாக செயல்படும் என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம். முத்துப்பேட்டை வாசகர்கள் தங்களது நல்லாதரவை தந்து எங்களை ஊக்கப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்