paavi

My blogs

About me

Gender Male
Introduction இப்போது தான் அறிவு வந்து தமிழ் சங்க இலக்கியங்களையும் , தமிழ் இலக்கணத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் . CIT யில் BSC Computer Technology முடித்து , தட்டு தடுமாறி விப்ரோ மூலம் பிட்ஸ் பிலானியில் MS software Engineering முடித்திருக்கிறேன் . IT யில் பதிமூன்று வருட வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாக வேலை சலிப்பு தட்ட ஆரம்பித்திருக்கிறது . தொழில் துறையில் தொபுக்கடீரென்று குதித்து விடலாம் என ஆசை பார்க்கலாம் . எனது blog http://paavib.blogspot.com/ , தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி paavib @gmail .com
Interests புத்தகங்களின் மீது தீராக் காதல் . நினைவு தெரிந்த வரையில் ஆனந்த விகடனின் நகைச்சுவை துணுக்குகளில் ஆரம்பித்தது, பின் சிறுவர்மலர், அம்புலி மாமா, இரும்புக்கை மாயாவி, சிந்துபாத், அலிபாபா, 1001 அரேபிய இரவுகள் என வளர்ந்து, விவேக் -ரூபலா (ராஜேஷ்குமார் ), கணேஷ் -வசந்த் (சுஜாதா), பரத் -சுசிலா (பட்டுக்கோட்டை பிரபாகர் ), நரேன் -வைஜேந்தி (சுபா ) என படிக்க ஆரம்பித்து, சுஜாதாவின் ஆளுமைக்கு ரசிகனாகி, சுபாவின் தன்னிலை விளக்கக் கதைகளை ருசித்து, சிறிது காலம் தேவிபாலாவையும், மாந்த்ரீக கதைகள் பக்கம் ஒதுங்கி (பாக்யா புத்தகத்திலும், இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்களிலும் ), பின் காபியையும், ஜூஸ்யையும் கலந்தார் போல பாலகுமாரனும், ரமணிச்சந்திரனும் பிடித்துப் போனது . பத்தாம் வகுப்பு விடுமுறையில் கல்கியும், சாண்டில்யனும் அறிமுகமாக வாள் சுற்றிக் கொண்டு ஒரு கனவுலகில் இருக்க ஆரம்பித்து, தமிழுக்கு போதாத காலம் கவிதை எழுத ஆரம்பித்தேன். (அது கண்ணதாசனின் எழுத்துக்களை படிக்க ஆர்மபித்த நேரம் .) பின் அது வாலி, வைரமுத்து, அப்துல் ரகுமான், என போய் வந்தது . பெங்களூரு நாட்களில் ஆங்கில புத்தகங்களின் அறிமுகம், ஹாரி பாட்டர் இல் தான் முதலில் ஆரம்பித்தேன், பின் அது கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து, sidney shelden, lord of rings, micheal critchon, jeffrey archer, john grishim, david baldacci, harrold robbinson, lee child, brent weeks (prism novels ), Stephenie Meyer (Twlight saga ), Christopher Paolini (Eragon series ), Robert jordon (wheel of time ), george RRmartin (game of thrones ), Brandon சண்டெர்சன் (Bridgemen -kaladin ), patrick rothfuss (Kevoth ), Joe Abercrombie (First Law series ) அப்படியே நிறைய பெயரே நியாபகம் இல்லாத vampire, warewolf என supernatural நாவல்களை படித்து ஆயிரம் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து குழம்பி, கூட இருப்பவர்களையும் குழப்பி இருக்கிறேன்.