முனைவர். பிரபாகரன்

My blogs

About me

Gender Male
Industry Consulting
Location Bel Air, Maryland, United States
Introduction இவர் தமிழ் நாட்டில் கணிதத்துறையில் B.Sc, M.Sc ஆகிய பட்டங்கள் பெற்றார். சில ஆண்டுகள், தமிழ்நாட்டில் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியபின், இவர் அமெரிக்காவில் கணினித்துறையில் M.S, Ph.D.,MBA ஆகிய பட்டங்கள் பெற்றார். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களிலும், NASA, US Army ஆகிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். இவர் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழரின் நலம் ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு உடையவர். இவர் அமெரிக்காவில் பல அமைப்புக்களில் பொறுப்பான பதவிகள் வகித்து, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கும் பணிபுரிந்தவர். இவர், அமெரிக்காவில் திருக்குறள், புறநானூறு, குறுந்தொகை ஆகிய நூல்களுக்கு, மாநாடுகள் நடத்தியுள்ளார். இவர் அமெரிக்காவில், திருவள்ளுவர் சிலையை நிறுவினார். 2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கினார். இவர் புறநானூறு, குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களுக்கு விளக்கவுரைகளை வெளியிட்டிருக்கிறார். அண்மையில், The Ageless Wisdom என்று ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றி ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். இவர் திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களை மேலை நாடுகளில் பரப்புவதைத் தன் குறிக்கோளாகக் கொண்டவர்.
Interests சங்க இலக்கியம், திருக்குறள்