தளவாடி

My blogs

Blogs I follow

About me

Gender Female
Location Colombo, Sri Lanka
Introduction நான் சுஜி எனக்கு என்று சில கருத்துக்கள் உண்டு. அது சிலருக்கு பிடிக்கலாம்,பலருக்கு பிடிக்காது போகலாம். அதற்காக நான் என் கருத்தை பகிராமல் இருக்க முடியாது. பிழை,தவறு செய்யாதவன் மனிதனாக இருக்க முடியாது . ஆகவே என் தவறுகளையும் சுட்டிக்காட்டுங்கள். ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். மற்றவர் மனம் நோக நடப்பது எனக்கு பிடிக்காது. சிரித்து வாழ்ந்திடு பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்பதை நான் கடைப்பிடிப்பவள் . ஒன்றும் தெரியாது என்பதற்கு கொஞ்சமாவது தெரியும் என்று இருப்பது மேல் என்பது என் கருத்து . கற்றது கை அளவு கல்லாததது உலக அளவு. யாரும் எதிலும் பூரண மனிதர் அல்ல. ஒருவருக்கு தெரிந்தது மற்றவருக்கு தெரியாது. கடவுள் இல்லை என்று வாதிட மாட்டேன் . நம்மை மீறிய ஒரு சக்தி நிச்சயம் இந்த உலகில் உண்டு என நம்புகிறேன். கஷ்டப் பட்டு நிறையப் படிப்பதை விட இஷ்டப் பட்டு கொஞ்சம் படிப்பது மேல். பெண்கள் ஆண்களுக்கு கீழ் இருப்பது தான் அழகு என்று நான் நினைக்கிறேன். அதற்காக பெண் அடிமையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. சமூகத்தில்நடக்கும் நீதி , அநீதிகளை பார்த்து விட்டு போகும் சாதாரண பெண்ணாக நான் இருக்க விரும்பவில்லை. இத் தளவாடி என்னைப் பிரதிபலிக்கும் என நம்புகிறேன். என் கருத்துக்களை உங்களோடு பகிரவே இவ் முயற்சி..