பா.சதீஸ் முத்து கோபால்

My blogs

About me

Gender Male
Location Bangalore, Karnataka, India
Introduction பழனி என்னுடைய சொந்த ஊர். சிறுவயது முதலே விலங்குகள், பறவைகள் மீது அதிகம் ஈர்ப்பு உடையவனாகவே இருந்திருக்கிறேன். இயற்கையின் மீதான பற்றுதலை இன்று வரை இறுகப் பற்றி இருக்கிறேன். சமீப ஆண்டுகளாக சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான தொடர் முயற்சிகளை செய்து வருகிறேன். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து மென் பொருள் துறையில் தொடர்ந்து பணியாற்றுவேனா என்பது தெரியாது. ஆனால் வாழ்நாள் முழுவதும் இயற்கைக்காக நிச்சயம் குரல் கொடுப்பவனாகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய முதல் கவிதை தொகுப்பு, "சிதறாத எழுத்துக்கள்", எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் 03.10.2010 அன்று பெங்களூரு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இயற்கை தொடர்பான செய்திகளை என்னுடைய வலைப்பூ (இவன் சதீஸ்) மூலமாகவும், மற்ற பிற ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். என்னுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கையை சுற்றியே இயங்குகிறது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது என்பதே என் எழுத்தின் மையக் கருவாக எப்போதும் இருக்கிறது. என்னுடைய இரண்டாவது புத்தகம் "யாருக்கானது பூமி?". காட்டுயிர் தொடர்பான கட்டுரை தொகுப்பை என் அனுபவங்கள் மூலமாக எழுதியிருக்கிறேன். இந்த நூலுக்கு, தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் 2014-15 -ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுச் சூழல் விருது வழங்கியுள்ளது.
Interests காட்டுயிர், பறவைகள்